my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - வைகாசி 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - புரட்டாதி 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - தை 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆனி 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆடி 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-புரட்டாதி 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-கார்த்திகை 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-பங்குனி 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆனி 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆனி 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆவணி 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - கார்த்திகை 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-தை 03 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - தை 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆவணி 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்தையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

January 18, 2015

வீ.எஸ்.கே இன் விளக்கம் ஆரம்ப விளக்கம் மட்டுமே, ஆழமான ஆத்மீக விளக்கங்களுக்கு மதுரைப் பணித்திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ள திரு ரஜபதி ஐயா இன் உரையைப் படிக்கவும்.

தகவல்  :  ஆத்திகம் வலைப்பதிவில் - வீ.கே.எஸ் இன் பதிவு

2009 ஆம் வருடம் கார்த்திகை 30, மார்கழி 1 ஆம் திகதிகளில் பதியப்பட்டது

ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்" 

அகவல் என்றால் "அழைப்பது" எனப் பொருள்!
முருகனின் மயிலும் அகவும்!!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!
அனைவர்க்கும் முருகனருள் முன்னிற்கும்!


சீதக்களபச்செந்தாமரைப்பூம் 
பாதச்சிலம்புபலவிசைபாடப் [2]
 


குளிர்நிறை சந்தனம் பூசிய கழல்கள் 
தாமரை மலரினைப் போலச் சிவந்தவை 
கால்களில் குலுங்கும் பாதச் சிலம்புகள் 
பேரொலி எழுப்பும் இன்னிசை ஒலிகள் 
திருவடி அதனில் பிரபஞ்சம் பிறந்தது 
நாத ஒலியினில் நானிலம் பிறந்தது 
அனைத்தும் இவனின் அடிகளில் பிறந்தன 
ஒவ்வொரு ஒலிக்கும் புதிதுபுதிதாய் 
இசையொலி எழுப்ப யுகங்கள் பிறந்தன 
மூலாதாரக் கனலினைக் கிளப்பும் 
நாயகன் கழல்கள் நாதம் எழுப்பும் 
நாதத்திலிருந்து அனைத்துமே பிறக்கும் 
[சீதம்= குளிர்; களபம்= சந்தனம்] 

பொன்னரைஞாணும்பூந்துகில்ஆடையும் 
வன்னமருங்கில்வளர்ந்தழகெறிப்பப் [4]
 


பொன்னால் ஆகிய அரைஞாண் கயிறும் 
பூவினைப் போலும் மென்மை தவழும் 
வெண்ணிறப் பட்டில் மின்னும் ஆடையும் 
பெருத்த இடுப்பில் பாங்குடன் மிளிர 
[பூந்துகில்= மென்மையான வெண்ணிறப்பட்டு; மருங்கு= இடை, இடுப்பு; எறிப்ப= ஒளிபரப்ப] 

பேழைவயிறும்பெரும்பாரக்கோடும் 
வேழமுகமும்விளங்குசிந்தூரமும் [6]
 


திருவடி தொடங்கி இடைவரை வந்தவர் 
அண்டசராசரம் அனைத்தும் அடங்கும் 
ஆனைமுகத்தோன் பானைவயிற்றில் 
பெட்டியைப் போலும் பெருநிறை வயிற்றில் 
சற்றே கனிந்து அதைப் பாடுகின்றார். 
ஆனைமுகத்தோன் அதனால் இங்கு 
கனத்த முகத்தோன் ஒற்றைக் கொம்பன் 
அழகுறை நெற்றியில் சிவந்ததோர் பொட்டு 
சிந்தூரம் எனவே அதனைச் சொல்வர் 
திருவடி துவங்கி முகநிறை தரிசனம் 
ஔவை செய்விக்கும் ஆனந்த தரிசனம்! 
[பேழை= பெட்டி; பாரம்= கனம்; கோடு= தந்தம்; வேழம்= யானை; சிந்தூரம்= சிவப்புப் பொட்டு] 

அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற்
குடிகொண்ட நீல மேனியும் [8]

படைத்தல் காத்தல், அழித்தல்,
மறைத்தல், அருளல் என்றே உலகில்
இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்
நான்கு கரங்கள், எட்டுக்கைகள்
பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டு
ஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்
அருள்நிறைக் கடவுள் கணபதி இவனே
முன் ஒருகையில் ஒடித்த தந்தம்
எழுத்தாணி எனவே அதனைக்கொண்டு
படைக்கும் தொழிலைச் செய்கின்றான்
இன்னொரு கரத்தில் மோதகம் ஏந்தி
அனைத்தையும் காக்கும் காப்புத் தொழிலையும்
மூன்றாம் கரத்தில் அங்குசம் ஏந்தி
அழித்தல் தொழிலையும் புரிகின்றான்
நாலாம் கரத்தில் பாசம் தாங்கி
மறைக்கும் கருமம் நிகழ்த்துகிறான்
ஐந்தாம் கரமாம் தும்பிக்கையினில்
அமுதக் கலசம் அதனைத் தாங்கி
அருளினை எமக்கு வாரித்தருகிறான்
ஆனையின் நிறமோ கருமை ஆகும்
ஆடையுடுத்ததோ வெண்மை ஆகும்
இரண்டும் கலந்தால் நீலம் ஆகும்
கண்ணுக்குக் குளுமை நீல நிறமே

தனியே தன்னந்தனியே......

அகத்தில் இவனைத் தனியே நிறுத்தி
வெளியன் இவனை வழிபடும் அன்பர்
அழியாநலனைப் பெற்றிடுவார் எனும்
நம்பியாண்டான் நம்பி சொன்னது
நீலத்திரு மேனியின் எழிலின்
தன்மைகுறித்தே என்றே கொள்க.

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று
கண்ணும் மும்மதச் சுவடும் [10]


அடியவர் நெஞ்சினில் அன்புடன் அருளும்
மந்திரம் யாவையும் சொல்லிடும் வண்ணம்
நாயகன் வாயும் தொங்கிய வண்ணம்!
ஆனையின் வாயினைப் போலே கீழே
தொங்கிடும் வாயின் பெருமை இதுவே!
நாலிரு புயமெனில் எட்டென வேண்டா
இருபுயம் என்பது வலிமையைக் குறிக்கும்
நுதலில் இருந்து வளர்ந்திடும் துதிக்கை
தோளெனத் தனியே அமைவது இல்லை
எனவே கணபதி வலிமை பொருந்திய
நான்கு புயங்களைத் தன்னில் கொண்டான்!
பகலவன், முழுமதி, அக்கினி எனவே
மூன்று கண்களைக் கொண்டவன் நாயகன்
மும்மதம் என்னும் ஆன்மவினைகளின்
பாவம் கழுவிடும் மதநீர் சுரப்பால்
முகத்தில் தழும்பாய்க் கோடினை உடையவன்
[நான்ற= தொங்குகிற; சுவடு= தழும்பு]

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப்
புரிநூல் திகழொளி மார்பும் [12]

எவர்க்கும் உண்டிங்கு இருசெவிகள்
இருந்தும் பயனற்று வாழ்கின்றார்
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்
என்று பாடினான் வள்ளுவன் இங்கு!
செவியின் பயனைச் சரியாய் உணரா
இழிநிலை மாந்தர் தன்னிலை மறந்தார்
நாயகன் புகழைக் கேட்பது ஒன்றே
செவிகள் செய்யும் புண்ணியம் என்று
அதனைச் செய்திடும் உயர்நிலை தவத்தோர்
அருளைப் பாடி அவனடி பணிய
அவனிரு செவிகளும் அசைந்து கொடுக்கும்!
ஆம்!~
கணபதி திருச்செவி மட்டுமே இங்கு
அசையும் தன்மை உடையனவாகும்!
வேறெவர் செவியும் அசைவது இல்லை
ஆனையின் செவிகள் மட்டுமே புரியும்!
ஆனைப்பாகன் ஆனையின் மீது
ஏறிடப் பற்றிடும் ஒருபொருள் செவியே!
கணபதி செவிகளைப் பற்றியவண்ணம்
பிறவித்துயரை ஒழித்திட முடியும்
அத்தகு பெருமை வாய்ந்திட்ட செவிகளை
ஔவை இங்கே அழகுறப் போற்றினார்!
மூவுலகுயிரும் ஒன்றாய் வணங்கிடும்
முழுமுதற்கடவுள் கணேசன் ஆவான்
அவனது முடியினில் பொலிவாய்த் திகழும்
பொன்முடி இவனே அரசன் என்னும்!
ஓமெனும் பிரணவ மந்திரம் காட்டும்
முப்புரிநூலைத் திருமார்பில் தாங்கி
ஒளியெனும் அறிவை எமக்குத் தருபவன்
விநாயகன் என்றே இச்சொல் உணர்த்தும்!

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம்
நின்ற கற்பகக் களிறே! [14]

அறிவுறை மாந்தர் பகுத்தறிவென்னும்
ஒருநிலைநின்று வாதம்செய்து நாளைக்கடத்துவர்
உண்மை அறிவுடை உயர்நிலை தவத்தோர்
உண்மை எதுவெனப் புரிந்தே இருப்பர்
ஐம்புலன் ஆசையில் அகப்பட்ட ஆன்மா
விழித்திரும்போது சூழ்நிலை அறிந்து
வேதனைகொள்ளும் நிலையினை ஆன்றோர்
ஜாக்கிராவஸ்தை என்று சொல்லுவர்
கனவுலகில் சென்று அலையும் ஆன்மா
விரும்பிய இடங்களைத் தானே அடைந்து
எங்கும் பரவி உணர்வுகள் கொள்ளும்
நிலையினை சொப்பனாவஸ்தை எனபர் அறிந்தோர்!
இவ்விரு நிலையிலும் சொற்களின் ஆட்சி
அதிகம் இருக்கும் என்பதை உணர்க!
ஆழ்நிலைத் துயிலில் சுழுத்தியில் அடங்கிய
சொற்கள் தம்மின் வலிமை இழக்கும்
பேசாநிலையில் ஆன்மாஇருந்தும்
இதுவோர் மறதிநிலையே!
இதனால் பெரிதும் பயனேதுமில்லை!
மனத்தை அடக்கி பிராணனில் ஒடுக்கி
சித்தம் தன்னை அவனில் நிறுத்தி
இருக்கும் நிலையைத் துரியம் என்பர்
ஆன்மா இங்கே இறையை உணரும்
காலமும் நேரமும் கடந்து நின்று
இன்பமும் துன்பமும் ஒழிந்து சென்று
பிறப்பும் இறப்பும் இல்லா நிலையிது
இந்நிலைதன்னில் இருப்பவன் கணேசன்
அனைத்தையும் தந்திடும் கற்பகத் தரு அவன்!
யானை அதிலும் ஆண்யானையாம்!
அதனால் கற்பகக் களிறே என்கிறார்!

முப்பழநுகரும்மூஷிகவாகன! 15


தோல், விதை, கொட்டை ஏதும் தள்ளாது
அனைத்தும் கொள்வது ஆனையின் குணமே
அன்பால் பழுத்த அடியவர்தம்மில்
குற்றம் குறைகள் ஏதுமிருப்பினும்
அப்புறம் தள்ளா அருட்பெருங்கடலிவன்!
ஆனை வடிவம் கனத்ததோர் உருவம்
ஆயினும் அமர்வதோ பெருச்சாளி மேலே
எவரும் தாங்கிடும் வண்ணம் மென்மை
அருளைப் பொழிபவன் என்பதை உணர்த்தும்
குண்டலியோகம்செய்பவர்உள்ளில்
குறுகுறுவெனவோர்உணர்வும்ஓடும்
பெருச்சாளிஒன்றுஓடுதல்போல
அவ்வுணர்விருக்கும்- இது ஆன்றோர் வாக்கு!
மூலம்தொடங்கிமேலேஏறிடும்
குண்டலிக்கனலின்உச்சியில்இருப்பவர்
விநாயகன் என்றும் அறிந்தவர் சொல்லுவர்! 

இப்பொழுதென்னைஆட்கொளவேண்டித்
தாயாயெனக்குத்தானெழுந்தருளி
மாயாப்பிறவிமயக்கம்அறுத்துத் [18]


எத்தனைதான் பட்டாலும் வாடியிங்கு நொந்தாலும்
மீண்டுமிந்தப் பிறவியெனும் ஆழ்கடலில் உழல்வதுவே
வாழுகின்ற உயிர்க்கெல்லாம் வாடிக்கை ஆகிப்போச்சு!
போதுமிந்தப் பிறவியென மனமிங்கு நினைக்கையிலே
சூது மிகுந்த வாழ்க்கையினிப் போதுமென எண்ணுகையில்
மாயமிந்தப் பிறவியென மனமுணரும் நேரத்தில்
தாயாக நீ வந்து தயை செய்து காத்திடவே
நாயாக நானிங்கு உழலாமல் பிறப்பறுத்து
நீயாக என்முன்னே இப்போதே எழுந்துவந்து
அடியேனை ஆட்கொள்ள வேண்டுமெனும் என்கதறல்

திருந்தியமுதலைந்தெழுத்தும்தெளிவாய்ப்
பொருந்தவேவந்தென்உளந்தனில்புகுந்து [20]


பிறவிப்பயனின் விளைவாய்ச் சிறிது சிறிதாய்க்
குறைந்திருந்து, நின்றன் கருணை என்னில் தெரிந்து
நின்னையே நாடி ஐந்தெழுத்தை அன்புடன் ஓத
மூலாதாரம் முதலில் கிளம்பி, சுவாதிட்டானம்
நாபி, இதயம், கண்டம்புருவமத்தி என்னும் இடங்களில்
சுழுமுனை வழியே நின்று துதிக்கும்
பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவம்
என்னும் ஐவரும் ஒவ்வொரு எழுத்திலும் நின்றிருந்து
ஓதும் நாமம் நாதமாய் மாறிட
கதறல் கேட்ட கணபதி அதனில்
ஓம் எனும் நாதமாய் வருவான் 
நற்றுணை புரிவான் இதயம் பொருந்தத் 
தன் திருவருள் தருவான் கணபதி.


குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி
வைத்துத் திறமிது பொருளென [22]

தன்னைத் தானே உணரும் பேறு
எல்லாருக்கும் வாய்ப்பதுமில்லை
தன்னையுணரச் செய்திட இங்கு
குருவென ஒருவன் வந்திடல் வேண்டும்
இறையருள் கூடி ஞானம் பிறந்திடக்
குருவே எமக்குத் திருவருள் புரிவான்
இதுவே உண்மை இதுவே மெய்யென
நல்லவை உணர்த்தித் திருவடி தருவான்
ஐந்தெழுத்தை அகத்தில் வைத்து
அனுதினம் நின்னை எண்ணித் துதித்திட
அன்புக்கணபதி நீயே என் குருவாய் வந்து

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா
யுதத்தால் கொடுவினை களைந்தே [24]


இதுவரை இங்கு வாடியதெல்லாம்
தீர்ந்தது என்று அருளினை வழங்கி
கையினில் ஏந்திய தந்தக்கோலால்
முந்தைவினைகளை முழுதுமாய் அழித்து
மகிழ்வாய் என்றன் கலியினைத் தீர்த்து

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத
ஞானத் தெளிவையும் காட்டி [26]

எத்தனை முறை யான் கேட்டபோதிலும்
முன்னிலும் இனிப்பாய்த் திகட்டாச் சொல்லை
பாவங்கள் போக்கிடும் திருமந்திரத்தை
உய்த்திடச் செய்திடும் உபதேசத்தை
என்றன் செவியில் அன்புடன் ஓதி
நூல்பல ஓதி கிடைக்கா ஞானம்
நீயே வந்து உரைத்திட்ட ஞானம்
யானெனும் செருக்கை ஒழித்திட்ட ஞானம்
திருவடி வைத்துத் தந்திட்ட ஞானம்
என்றும் எனக்குத் தெவிட்டா ஞானம்
அதனை அறிந்ததில் தெளிந்தது ஆன்மா

ஐம்புலன்தன்னைஅடக்கும்உபாயம்
இன்புறுகருணையின்இனிதெனக்கருளிக் [28]


இன்பம் என்பது இன்னது என்று
தன்னையுணரா மாந்தர் இங்கு
இன்பம் என்பது புலனில் என்று
நின்னை மறந்து தன்னை அழிப்பர்
கண்டதைக் கண்டு காமம் கொண்டு
கருத்தொழிபட்டு மதியை இழந்து
புலனில் அடக்கம் கொள்ளாதிருந்து
பொய்வழி சென்று மெய்வழி மறப்பர்
சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்னும்
ஐம்புலன் மீது கொண்டிட்ட அவாவில்
தன்னிலைகெட்டு தறிகெட்டலைந்து
செயல்வழி மறந்து சிந்தை குலைவர்
இதனைவிடுத்து சிவனில் இழைந்து
அவனை நினைந்து அகத்துள் மலர்ந்து
நற்செயல் செய்யும் பண்பு வளர்ந்து
அருளொளி படர பிறவிருள் அகல
கணபதி தானே தன்னுள் வந்து
மாயை அறுக்கும் வழிகளைக் காட்டி
இன்பம் அறுத்துப் பேரின்பம் தந்திட
புலனை அடக்கும் வழிகளைக் காட்டி

கருவிகளொடுங்கும்கருத்தினையறிவித்(து)
இருவினைதன்னைஅறுத்திருள்கடிந்து [30]

தத்துவங்கள் எனச் சொல்லப்படும் முப்பத்தாறும்
உணர்வுடனிருக்கையில் உபத்திரவம் செய்திடும்
இறையருள் கூடி குருவருள் நாடி
ஞானம் பிறந்து ஒன்றன்பின் ஒன்றாய்
ஒடுங்கிடச் செய்யும் வித்தை அறிந்து
ஒவ்வொரு விளக்காய் உள்ளுள் ஒடுங்க
எல்லையில்லா இன்பம் பிறக்கும்!

ஆம்!
எல்லா விளக்கும் அணைந்தபின்னே
எல்லையில்லாப் பெருவெளி தெரியும்!
நல்வினை தீவினை இரண்டின் பயனால்
இன்பம் துன்பம் என்பன நிகழும்
இவற்றின் விளைவால் பிறவிகள் எடுக்க
ஆன்மா இங்கே அலைந்து கிடக்கும்
திருவருள் கூடிய பேரின்பநிலையில்
அனைத்தும் இங்கே அகன்றிடத் துடிக்கும்
அறுகம்புல்லோன் அருளால் இருவினை இரண்டின்
பயனும் ஒழிந்து ஆணவமென்னும் இருளும் மறைந்து

தலமொருநான்கும்தந்தெனக்கருளி [31]

இறைவனை அடைய நால்வழி உண்டு
பணிவழி, மகன்வழி, நட்புவழி, காதல்வழி
என்பன இவற்றின் வகைகள் ஆகும்!
சரியை கிரியை யோகம் ஞானம்
என்னும் பெயரும் இவற்றுக்குண்டு
இறைபணி செய்து அடியரைப் பணிந்து
முதல்வழிமூலம் அடைவது சாலோகம்
இறையிடம் அமைத்து அவரை வழிபடல்
திரவியம் சேர்த்துத் திருப்பணி செய்தல்
மகனெனும் வழியிது அடைவது சாமீப்யம்
பொறிகளையடக்கி புலனை அடக்கல்
அன்புடன் அவனை அனுதினம் எண்ணல்
யோக வழியினில் பெறுவது சாரூபம்
தன்னையிழந்து தன்னை மறந்து
இறையில் கலந்து தானே இறையும்
என்றே கசிந்து காதல் மல்கிட
கனிவது காதல் வழியெனச் சொல்வர்
கிடைப்பதோ என்றும் சாயுச்சியம்
இவ்வழி நான்கும் எனக்கென அருளி
ஈசனவன் அடியரோடு தானும் கலந்திருந்து
அவ்வுலகில் வாழ்ந்திடலே சாலோகம் ஆகும்
ஈசனது அடிபற்றி அவனுக்கு அருகாமையில்
மகிழ்வுடன் இருத்தல் சாமீப்யம் ஆகும்
ஈசன் வடிவினையே தானும் அடைந்து
ஈசனாகவே வாழ்வதுவோ சாரூபம் ஆகும்
ஈசனே தானாகி தன்னுள்ளே அவன் கலந்து
ஒன்றாக வாழ்ந்திடலே சாயுச்சியம் எனச் சொல்வர்.

மலமொருமூன்றின்மயக்கம்அறுத்தே [32]


உலகில் பிறக்கும் ஆன்மா அனைத்தும்
ஆணவம் கன்மம் மாயை என்னும்
மும்மல வசத்தால் அல்லல் கொள்ளும்
இவற்றில் இருந்து பிறக்கும் மயக்கம்
என்றும் அண்டாமல் அடியோடகற்றி

ஒன்பதுவாயில்ஒருமந்திரத்தால்
ஐம்புலக்கதவைஅடைப்பதும்காட்டி [34]


ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!
'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்
ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,
இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,
ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்
வழியே நிகழும் வகையினை அறிந்து
வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்
மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை
எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,

ஆறாதாரத்(து) அங்குசநிலையும்
பேறாநிறுத்திப்பேச்சுரையறுத்தே [36]


ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்
ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி
பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!
மூலாதாரம் என்னும் முதல்நிலை
குதம்,குறி இவற்றின் நடுவே இருக்கு
கணபதி இங்கே ஆளுமைசெய்து
சாதகன் தன்னை வழிநடத்திடுவார்
குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்
பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்
உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்
திருமால் இதிலே வாசம் செய்கிறார்
இதயநாடியில் அநாகதம் உளது
உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்
கண்டம் நடுவே விசுத்தி ஆகும்
மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்
புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்
சுழுமுனை என்பதும் இதுவேதான்
ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்
மூலம் தொடங்கி மேலே எழும்பி
பிராணன் இவற்றின் வழியே கடந்து
சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்
இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்
ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த
இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்
இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி
ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்
தன்னை மறந்தவன் இறையினை உணரும்\
இன்னொருநிலையே நிராதாரம் என்பர்
இவ்வகை யோகம் கைகூடிவிட
பிராணன் வீணே செலவாகாமல்
இடம் வலம் என்னும் இரண்டும் அடக்கி
ஆனையைப் பழக்கும் அங்குசம்போல
ஆனைமுகனும் மூலத்தில் நின்று
அன்புடன் அருள்வார் அவரைத் துதித்தால்!
இந்நிலை கைவரின் பேச்சும் ஒழியும்
ஆன்மா என்றும் ஒருநிலை நிற்கும்

இடைபிங்கலையின்எழுத்தறிவித்துக்
கடையிற்சுழுமுனைக்கபாலமும்காட்டி [38]


சூரியன், சந்திரன், அக்கினி என்னும்
மூவகை நாடிகள் உடலில் உள்ளன.
பிங்கலைஎன்னும்சூரியநாடி
வலப்பக்க நாசியின் வழியே செல்லும்
இடகலைஎன்னும்சந்திரநாடி
இடப்பக்க நாசியின் வழியினில் செல்லும்
சுழுமுனைஎன்னும்அக்கினிநாடி
உடலின் நடுவில் உயிர்த்து நிற்கும்
வல, இடம் வாயு சென்றுவருவதில்
உடலின் இயக்கம் நிகழ்கிறது
பிராணனின் வாயு உள்ளே செல்வது
பூரகம் என்னும் சொல்லால் அறியும்
உள்ளே சென்றதை உடலிருத்துவது
கும்பகம் என்னும் சொல்லால் அறியும்
வெளியே சென்றிடும் வாயுவின் செயலை
இரேசகம் என்னும் சொல்லால் அறிக
ஓமெனும்சொல்லைப்பிரித்துப்பார்த்தால்
அகரம்உகரம்மகரம்புரியும்
பிங்கலைக்குரியது அகரம் ஆகும்
உகரமும் மகரமும் இடகலை சுழுமுனை
இரண்டையும் குறிக்கும் எழுத்துகள் ஆகும்
மூலத்தில் எழுந்திடும் முக்கோண ஜோதியை
மேலே எழுப்பிச் சிரசில் கொணர்ந்தால்
ஆயிரம் இதழுடை தாமரை ஒன்று
அகலவிரிவதை ஆன்றோர் உணர்வர்
இவ்வகைவழிகளின்முறைகள்யாவையும்
குருமுகம்அறிவதுசாலச்சிறந்தது
இடகலை பிங்கலை இரண்டும் நிறுத்தி
சுழுமுனைவழியே சிரசைக் காட்டிட
கணபதி அருள ஔவை மகிழ்கிறாள்!

மூன்றுமண்டலத்தின்முட்டியதூணின்
நான்றெழுபாம்பின்நாவில்உணர்த்திக் [40]

ஆதாரங்கள் ஆறும் இங்கே
இரண்டிரண்டாய்ப் பிணைந்திருக்கும்
மூலாதாரமும்சுவாதிட்டானமும்
அக்கினிமண்டலம் எனவாகும்
மணிபூரகமும்அநாகதமும்
சூரியமண்டலம் எனவிளங்கும்
விசுத்தி, ஆக்கினைஇரண்டும்சேர்ந்து
சந்திரமண்டலம் எனவிளங்கும்
குண்டலினி என்னும் பரிக்ரக சக்தி
பாம்பின் உருவம் தனைக்கொண்டு
மூலாதார மடியினில் தன்னைச்
சுருட்டிவைத்துத் தொங்கிநிற்கும்
முறையுடன் புரியும் யோகசாதகன்
சுருண்டிருக்கும் அரவம் இதனை
மூன்று மண்டல வாயில் வழியே
ஆக்கினைவரையில் தானெழுப்பி
மந்திரச் சொல்லை நாவில் உணர்ந்து
ஆன்மா இதனை உணரச் செய்யும்

குண்டலியதனிற்கூடியஅசபை
விண்டெழுமந்திரம்வெளிப்படஉரைத்து [42]

பேசாதொலிக்கும் மந்திர சத்தம்
சுவாசச் சுழலின் துணையால் நிகழும்
இடகலை பிங்கலை சுழுமுனை மூலம்
சுழலும் ஒலியே அஜபா எனப்படும்!
உட்செலும் பிராணன் 'ஸோ' எனும் ஒலியையும்
கும்பகம் நிற்கும் வாயுவில் 'ஹம்'எனும் ஒலியும்
கூடச்சேர்ந்து 'ஸோஹம்' எனவாகும்! 
ஸோஹம் என்பதே சிவோஹம் ஆகும்! 
சிவோஹம் என்னும் சொல்லாமந்திரம்
ஒவ்வொரு சுவாசம் நிகழும் போதும்
ஒவ்வொருவர்க்குள்ளும் நிகழ்ந்தே இருக்கும்
அறிந்தவர் இதனைப் பிடித்துக்கொண்டு
சாதகம் என்னும் பயிற்சி செய்யின்
உள்ளே மூளும் கனலின் வெம்மை
தன்னில் உணரும் ஞானம் பிறக்கும் 
[அசபை= அஜபா]

மூலாதாரத்தின்மூண்டெழுகனலைக்
காலால்எழுப்பும்கருத்தறிவித்தே [44]


இத்தனை இதுவரை காட்டிய கணேசன்
மூலத்தினின்று முளைத்தெழும் சோதியைக்
கிளப்பிவிட்டு மேலெழும்பச் செய்திருந்து
சுழுமுனை மார்க்கமாய் கொண்டுசெல்லும் வழியினைக்
காற்றெனும் பிராணன் வழியினைச் சொல்லி
காட்டித்தந்த அருள்திறத்தைப் பாடுகிறாள்!
[கால்=காற்று, பிராணன்]
அமுதநிலையும்ஆதித்தன்இயக்கமும்
குமுதசகாயன்குணத்தையும்கூறி [46]


செய்துவரும் பயிற்சியதும் மென்மேலும் முதிர்ந்துவர
ஆனந்தம் உள்ளினிலே அமுதமெனப் பொங்கிவரும்!
சூரியனும் சந்திரனும் இசைந்திருந்து இளகவைக்கும்
செயல்திறனைச் சூட்சுமமாய் ஔவையிங்கு சொல்லிநின்றாள்
[மேலிதனைச் சொல்லுதற்கு குருவினருள் எமக்குவேண்டும்!]

இடைச்சக்கரத்தின்ஈரெட்டுநிலையும்
உடல்சக்கரத்தின்உறுப்பையும்காட்டிச் [48]


ஆதாரம் ஆறினிடை அமர்ந்திருந்து இயக்குகிற
பதினாறு கலைகளையே பாட்டியிங்கு சொல்லுகிறாள்
மேலிருக்கும் ஸஹஸ்ராரம், ஆதாரம்ஆறு,
லலாடபிந்து, அர்த்தசந்திரன், ரோகிணி,
நாதம், நாதாந்தம், சக்தி, வியாபிகா,
சமனா, உன்மனா என்னுமிந்தப் பதினாறு
நிலைகளையே கடந்தவரே உத்தமத் தவத்தோர்
ஆதாரச் சக்கரங்கள் ஓராறும்,
சூரிய சந்திரக் கலையிரன்டும்
சேர்ந்திங்கு உடற்சக்கரம் எட்டானது
உள்ளிருக்கும் சக்கரத்தை
உள்ளிருக்கும் கணபதிதான்
உள்ளபடி காட்டுகிறான்

சண்முகதூலமும்சதுர்முகசூக்கமும்
எண்முகமாகஇனிதெனக்கருளிப் [50]


உருவினைச் சமைக்க ஆறுமுகம் கொள்வர்
பருப்பொருள் இலக்கணம் அதுவே ஆகும்
வடிவம், உயரம், நீளம், அகலம்,
திண்மை, பருமை எனவும் சொல்வர்
நான்முகம் என்பது நுண்பொருள் இயல்பு
இயந்திரவடிவில் இதனை அமைப்பர்
இறையவன் உருவினை அறிந்திட உதவிடும்
பத்து குணங்களும் எண்ணிடச் செய்து
உள்ளில் காட்டும் யோகியர் நிலையினை
கணபதி காட்டித் தருவான் என்றாள்

புரியட்டகாயம்புலப்படஎனக்குத்
தெரியெட்டுநிலையும்தெரிசனப்படுத்திக் [52]


ஐம்புலன் ஐந்தும், மனம், புத்தி
அகங்காரம் எனும் மூன்றும் சேர்ந்த
சூக்கும உடலின் எட்டுநிலைகளும்,
உள்ளிருக்கும் ஆறு ஆதாரங்கள்
நிராதராம், மீதானம் எனும்
எட்டுநிலைகளாய் விரிந்திருக்கும்
அற்புதத்தை எனக்குப் புரியவைத்தனையே
என ஔவையின் மகிழ்ச்சி அதிகமாகிறது!

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி [54]

இறையின் தரிசனம் தியான முடிவினில்
மும்மலம் விளைத்த அகவிருள் விலகி
ஆன்மா ஒளியினைக் காணும் வேளையில்
சாதகன் சிரசின் மேலொரு ஒளியின்
காட்சியும் கிட்டும் என்பர் யோகியர்
நால்வகை நிலையுள் சாலோகமென்னும்
முதல்நிலை இதுவென ஆன்றோர் அறிவர்
சரியை என்னும் யோகம் சித்திக்க
சாலோகநிலையினில் பேரொளி தரிசனம்
இறையருள் கிட்டிய பெருமித மகிழ்வில்
ஔவைப்பாட்டி குதித்தாடுகிறாள்!

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து [56]

ஆன்மா தன்னை அறியும்போது
இறையின் அருகில் இருப்பதை உணரும்
இறையருள் இன்றி இது நிகழாது
பேரொளிவெள்ளம் உள்ளில் தெரிய
ஆனைமுகனும் அருகில் தெரிவான்
ஐம்புலன் ஆளுகை தன்னை மறைக்க
ஆன்மா எதுவென தனக்கே மறக்க
அமலன் அருளால் தன்னை அறிந்திட
ஞானம் பிறந்த நன்னெறி நிலையில்
சாமீபமென்னும்இரண்டாம்நிலையினை
ஆனைமுகனின் அருகில் இருப்பதை
அறியும் ஔவை அகமகிழ்கின்றாள்!
சுழுமுனை வரையினில் கனலை எழுப்பி
நாடிகள் பத்தையும் சுத்தப்படுத்தி
அமுதநிலையையும் அறிந்து மகிழ்ந்து
ஆயுளை நீட்டும் வழியடைந்தாலும்,
ஆனைமுகனின் அருளால் கிட்டும்
இந்நிலை ஞானம் கைகூடாவிடின்,
தன்னை அறியும் நிலை கிட்டாவிடின்,
ஏதொருபயனும் இல்லை என்பதை
உணர்ந்திட்ட ஔவை இவ்வண்ணம் மகிழ்கிறாள்!
இவையெலாம் முறையே தன்னில் நிகழ்ந்திட
முன்னை வினைகள் முதலில் மாயணும்!
காலம் காலமாய்ப் பிறவியெடுத்து
கணக்கில்லாது வினைகள் புரிந்து
கணக்கினை மேலும் மேலுமாய்க் கூட்டி
ஆன்மா உள்ளின் அடியில் அழுந்தி
சுமைகளைக் குறைக்கும் வழிதெரியாமல்
அலைந்திட்ட ஆன்மா விடுதலை பெற்று
முந்தைய வினைகளை முழுதுமாய்க் களைந்து
பேரொளி கண்டு தன்னை அறிந்து
மகிழ்வில் ஆழ்ந்திடும் காட்சியைக் கண்டாள்!

வாக்கும்மனமும்இல்லாமனோலயம்
தேக்கியேயென்றன்சிந்தைதெளிவித்(து) [58]

சொல்லிய சொல்லும், எண்ணிய எண்ணமும்
பாசம் என்னும் அறிவின் விளைவுகள்!
பாசமறுக்க இறையருள் வேண்டும்!
இறையருள் வருவது குருவருள் மூலம்!
சொல்லும், எண்ணமும் அறவே அறுத்து
மனத்துள் ஒடுங்கிட இன்பம் பிறக்கும்
பாசமறுத்து பசுவெனும் அறிவை
உள்ளில் அறியும் நிலையைக் காட்டிட
இறையே இங்கு குருவாய் வந்த
இனிமைக் களிப்பில் ஔவை சிலிர்க்கிறாள்!

இருள்வெளியிரண்டுக்(கு) ஒன்றிடம்என்ன
அருள்தரும்ஆனந்தத்(து) அழுத்தியென்செவியில் [60]


இருளைக் காண்பதும் ஒளியைக் காண்பதும்
கண் எனும் ஒன்றே புரிந்திடும் செயலாம்!
ஞானம் பிறப்பதும் அறியாமை இருப்பதும்
சிவமயம் என்னும் பேரருள் ஆணை!
இதனை அறிந்து, அறிந்தோம் என்னும்
எண்ணமும் அகன்று இறையருள் தன்னில்
தானே இறையாய் இருப்பது என்னும்
மூன்றாம்நிலையாம்சாரூபம் தன்னில்!
அருளே வடிவாம் கணபதி அருளால்
அறிவும் அறிவின்மையும் பிறக்கும் இடமும்
ஒன்றே என்னும் தெளிவில் பிறக்கும்
இன்பநிலையினில் சாரூபம் கண்டாள்!

எல்லையில்லாஆனந்தம்அளித்(து)
அல்லல்களைந்தேஅருள்வழிகாட்டிச் [62]


இத்தனை வந்ததும் எல்லாம் மறையும்
தானேஇறையெனும்உணர்வும்மறையும்
எல்லையில்லாப் பெருவெளியதனில்
எல்லைகள் ஏது எண்ணங்கள் ஏது
எல்லா நலனும் இழந்தே போயினும்
எல்லையில்லா இன்பமே நிலைக்கும்
நாலாம் நிலையாம் சாயுச்சியம் எனும்
சொல்லா நிலையில் சுகமே விளையும்
இம்மை மறுமை பிறப்பு இறப்பெனும்
எல்லாத் துயரும் அடியோடழிந்து
அல்லல்கள் யாவும் நில்லாதொழிந்து
கணபதி அருள்வழி ஒன்றே தெளிந்து
ஆனந்த நிலையினில் ஔவை திளைக்கிறாள்!

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி [64]

உருவாய் வந்து திருவருள் செய்தவன்
குருவாய் வந்து அகவிருள் தொலைத்தவன்
அருவுருவாகி அகத்துள் ஆடுவான்
அவனே உருவிலா சதாசிவம் ஆகும்
சிவமாய், சக்தியாய், விந்துவாய், நாதமாய்
அருவம் காட்டி ஐந்தொழில் புரிபவன்
சதாசிவமாகி விண்வெளி நிற்பான்
உள்ளிலும் புறத்திலும் இவனே நிறைவான்
ஆக்கல் காத்தல், அழித்தல், மறைத்தல்,
அருளல் என்னும் ஐந்தொழில் யாவும்
செய்திடும் அருவுரு சதாசிவம் என்பான்
விண்வெளியதனில் நாதமாய் ஒலிப்பான்
கண்ணில் தெரிந்தவன் சத்தத்தில் நிறைந்து
சதாசிவமாக அண்டத்தில் ஒலிப்பான்
சித்தத்தில் அவனே சிவலிங்கம் ஆவான்
வானத்திலாடும்மயில்குயிலாச்சு!
யோகம் என்னும் ஞானம் பெற்றோர்
அண்டத்துள் அறிவது சதாசிவத்தை
உள்ளம் என்னும் பிண்டத்தில் அறிவது
சிவலிங்கம் என்னும் அதுவே ஆகும்
அகமும் புறமும் யோகமும் போகமும்
இவரருளாலே நிறைந்திடக் கண்டு
கணபதி தந்த நற்கொடை அருளிது
மழையாய்ப் பொழிவதில் ஔவை நனைகிறாள்!


அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி [66]

இறையவன் திருவுரு கொள்வதற்கும் அரியது
சின்னஞ்சிறிய அணுவுள்ளும் அணுவாய் இருப்பான்
அண்டபகிரண்டம் முழுதுக்குமாய் விரிந்துமிருப்பான்
எங்கெங்கு நோக்கினும் சக்தியடா எனப்பாடிய
பாரதியின் சொல்போல காணுமிடமெல்லாம்
நீக்கமற நிறைந்திருக்கும் அவனருளைப் பருகுவது
இறையருள் தனக்குக் கொடுத்திட்ட நிலையை
எவரும் புரிந்திடத் திருவுளம் கொண்டு
அனைவரும் அறிந்திடும் ஒருபொருள் எடுத்து
அதனின் மூலம் எமக்கு உரைக்கிறாள்
பாலும்,தெளிதேனும், பாகும் பருப்பும்
கரும்பும், ஒரு முக்கனியும் சொற்சுவை சேர்க்கும்!
கணுக்களெல்லாம் முற்றிக் கனிந்து
கருப்பஞ்சாறு தன்னில் நிறைந்து
இனிப்பெனவே இருக்கின்ற கரும்புபோல
என இந்தக் கரும்பைச் சுவைக்கிறாள் ஔவை


வேடமும்நீறும்விளங்கநிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர்குழாத்துடன்கூட்டி [68]


சிவனை உணர்ந்து சிவத்தில் திளையும்
திருவடி பணியும் அடியவர் எல்லாம்
அடியவர் என்பதைக் காட்டிடும் புனிதத்
தவமுனி வேடமும் தவத்திரு நீறும்
தாங்கியே தம்மைக் காட்டிக் கொள்வர்
ஆனைமுகனின் அருள்வழி அடைந்த
ஔவைப்பாட்டியும் தானும் அதுபோல்
தவநிறை வேடம் தாங்கிடச் செய்து
மந்திரமாகும் சுந்தர நீற்றைத்
தன்னில் அணிந்து தன்னைப் போலும்
இறையருள் நிறைந்த அடியவர் கூட்டம்
என்றும் தன்னுடன் தங்கிட வேண்டி
தாயினும் சிறந்த தயாவாய் ஆளும்
சங்கரன்மகனின் தாள்பணிகின்றாள்

அஞ்சக்கரத்தின்அரும்பொருள்தன்னை
நெஞ்சக்கருத்தின்நிலையறிவித்துத் [70]

ஐந்தெழுத்துமந்திரத்தின்சுந்தரத்தைச்சொல்லிடுவோம்

''கரமிங்கு மறைக்கும்பொருள்
''கரமிங்கு மும்மலங்கள்
'சி'கரமென்னும் பதி உண்மை
''கரமவன் அருட்கருணை
''கரமது பசுவுண்மை
சொந்தமான பதியை விட்டுப்
பிரிந்துவந்த பசு ஆன்மா
திரும்ப அதை அடையாவண்ணம்
மறைந்திருந்து அதைத் தாக்கும்
மலமென்னும் மகரம் இங்கு!
பதியவனின் அருட்கருணை
பாய்ந்துவந்து தடையழிக்க
மறைப்பிங்கு விலகியோடி
பசுவிங்கு பதி அறியும்!
நமசிவயவின் பொருளிதுவே
ஐந்தெழுத்து மந்திரத்தை
அனுதினமும் இடைவிடாது
அன்புடனே ஓதிவரின்
அழுந்திவரும் ஆன்மாவும்
பேரின்பப் பேறடையும்
ஓமென்னும் பிரணவத்தின்
துணையின்றி தனியாக
ஓதுகின்ற பெருமையிங்கு
பஞ்சக்கரம் ஒன்றுக்கே
இருப்பதனை உணர்ந்திடுவோம்
இத்தகைய பேறுடைய
பஞ்சக்கர மந்திரத்தின்
உட்பொருளை கணபதியும்
ஔவைக்கு விளக்கிவிட
அன்னையிவள் ஆர்ப்பரிக்கிறாள்!

[பஞ்சக்கரம்= பஞ்ச+ அக்கரம்= பஞ்ச அக்ஷரம்= நமசிவய] 

"சிவாய எனச் சொல்லி மூச்சிழுத்து நிறுத்திவிட்டு
நம:வெனச் சொல்லியதை வெளியினிலே விட்டுவிட
பலகாலப் பயிற்சியினால் தொங்கிநிற்கும் குண்டலினி
தானாகக் கிளர்ந்தெழுந்து மூலாதாரச் சக்கரத்தில்
தானாக நிலைகொண்டு ஒவ்வொன்றாய் மேலெழும்பி
சஹஸ்ராரம் சென்றடைய, சத்தத்தில் சதாசிவமும்
சித்தத்தில் சிவலிங்கமும் தானாகத் தோன்றிவிட
மூண்டெழுந்த முக்கோணச்சுடரினிலே மலமெல்லாம் சாம்பலாகும்
திருநீறாய் அதைக்கொண்டு நிர்மலனாய்த் திகழ்ந்திடுவாய்"
எனவந்த ஆனைமுகன் அருட்கருணைத் திறத்தினிலே
ஔவையிவள் அகமகிழ்ந்து ஆழ்நிலையில் அமிழ்கின்றாள்!

தத்துவநிலையைத்தந்தெனையாண்ட
வித்தகவிநாயகவிரைகழல்சரணே! [72]


"தானே அது" வென்னும் தத்துவத்தின் பொருளாகி
நாடிவந்த எவருக்கும் அருள்வழங்கும் அன்பனிவன்
வாடிநின்ற எவர்துயரும் பொடியாக்கிப் போக்கிடுவன்
ஆனைமுகக் கடவுளிவன் அறுகம்புல் அணிந்திடுவான்
எளியனான என்றனையும் ஏற்றிவிடக் கருணைகொண்டு
தவஞானத் தத்துவத்தை வித்தகனாய் எனக்குரைத்து
அருள்ஞான உபதேசம் தந்தென்னை ஆட்கொண்ட
நின்னடியைப் பணிந்திங்கு திருவடியில் சரண்புகுந்தேன்

என்றிங்கு முடிக்கின்றாள் தமிழன்னை ஔவைப்பாட்டி
திருவடியில் நூல் தொடங்கி திருவடியில் தாள்முடித்தாள்
கருணையுளம் மிகக்கொண்டு தமிழரெலாம் வாழவென்று
கருத்தெல்லாம் பாட்டாகக் கவினுறவே சொல்லிவைத்தாள்
செந்தமிழின் செல்வமென எமக்கெல்லாம் வந்தயிவள்
தாளடியை யான் பணிந்து தெரிந்தவரை சொல்லிவைத்தேன்
சொல்லவைத்த ஔவைக்கு என்வணக்கம் சொல்லிவைத்தேன்
சொலப்பணித்த கணபதியின் தாளிணையில் நான் பணிந்தேன்
சொற்குற்றம் பொருட்குற்றம் இதிலிங்கு இருக்குமெனில்
குற்றமெலாம் எனக்கெனவே எனசொல்லிப் பணிகின்றேன்
நிறையெதுவும் இதிலிருப்பின் முன்சொன்ன பெரியோர்க்கு
அத்தனையும் சேருமென்று சொல்லியிங்கு முடிக்கின்றேன்!

"வித்தக விநாயகன் விரைகழல் சரணே!"

"விநாயகர் அகவல்" முற்றிற்று.


Pillaiyar
Pillaiyar